உடுமலை:உடுமலையில், வட்டார போக்குவரத்து துறை சார்பில், போக்குவரத்து வார விழாவையொட்டி, ெஹல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வந்த்கண்ணன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். டி.எஸ்.பி., தேன்மொழிவேல், மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி முன்னிலை வகித்தனர். குட்டைத்திடலில் இருந்து, துவங்கிய ஊர்வலத்தில், ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து வாகன ஓட்டுனர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நகரின் தளி ரோடு, பொள்ளாச்சி ரோடு மற்றும் முக்கிய ரோடுகள் வழியாக சென்ற ஊர்வலம், நேதாஜி மைதானத்தில், நிறைவு பெற்றது.