புதுடில்லி, ஜன. 14-
பெங்களூருவை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் 'ஓலா' நிறுவனம், 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
செயல்திறனை மேம்படுத்த, தொடர்ந்து மறுசீரமைப்பு பயிற்சிகளை மேற்கொள்கிறோம்.
இதன் காரணமாக, 'ஓலா கேப்ஸ், ஓலா எலக்ட்ரிக், ஓலா நிதிச் சேவை' ஆகியவற்றை சேர்ந்த 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை துவங்கியுள்ளோம்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு 'நோட்டீஸ்' வழங்கியுள்ளோம். இருப்பினும் பொறியியல் மற்றும் வடிவமைப்பில் அனுபவம் பெற்றவர்களை, புதிதாக பணியமர்த்துவதை தொடர்வோம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓலா நிறுவனம், கடந்த மார்ச் 2022ல் கையகப்படுத்திய 'நியோ பேங்கிங்' தளமான 'அவைல் பைனான்ஸ்' நிறுவனத்தை, கடந்த வாரத்தில் மூடியது குறிப்பிடத்தக்கது.