உடுமலை:நாட்டுப்புற கலைகளை ஆடி, பொங்கல் பண்டிகையை பள்ளி, கல்லுாரிகளில், சிறப்பாக கொண்டாடினர்.
உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி மகளிர் கல்லுாரியில், பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், பல்வேறு நாட்டுப்புற கலைகளை மாணவியர், ஆடி, பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். ஆர்.ஜி.எம்., பள்ளியில், மாணவ, மாணவியர், கரும்பு தோரணம் கட்டி, பொங்கல் வைத்தனர். கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.
வி.ஏ.வி., பள்ளியில், மாணவ, மாணவியர் பொது பொங்கல் வைத்து வழிபட்டனர். அந்தியூர் கமலம் கலை, அறிவியல் கல்லுாரியில், வள்ளி கும்மி உள்ளிட்ட நாட்டுப்புற கலைகள் நடத்தப்பட்டு, பொங்கல் கொண்டாடப்பட்டது.