உடுமலை:மாரியம்மன் கோவிலில், கும்பாபிேஷக முதலாம் ஆண்டு விழா வரும் 18ம் தேதி நடக்கிறது.
உடுமலையில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த ஆண்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மகா கும்பாபிேஷகம் விமரிசையாக நடந்தது. கும்பாபிேஷகம் முடிந்து முதலாம் ஆண்டு விழா வரும் 18 ம் தேதி, யாக குண்ட பூஜைகளுடன் நடக்கவுள்ளது.
அன்று, காலை, 6:30 மணிக்கு, மங்கள இசையுடன் விழா துவங்குகிறது. தொடர்ந்து அனுமதி கேட்டல், விக்னேஷ்வர பூஜை, சங்கல்பம், பஞ்சகவ்யம், புண்யாகவாசனம், கலசங்கள் ஆவாஹனம் மற்றும் ேஹாமங்கள் நடைபெறுகிறது.
பின், அம்மனுக்கு மகா அபிேஷகம், அலங்கார பூஜைகள், மகா தீபாராதனை நடக்கிறது.