சொந்த ஊர் புறப்பட்ட மக்கள்: சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்| People who left their hometown: heavy traffic jam in Chennai | Dinamalar

சொந்த ஊர் புறப்பட்ட மக்கள்: சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்

Updated : ஜன 13, 2023 | Added : ஜன 13, 2023 | கருத்துகள் (8) | |
சென்னை : பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட மக்கள் புறப்பட்டு சென்றால், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் இன்று வழக்கத்தை விட கூட்டம் அலைமோதியது. இரண்டு நாளில் 2.40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளதால், சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது/ பொங்கல் பண்டிகை ஜன., 15 முதல் 17ம் வரையில் கொண்டாடப்படுகிறது. இதனால்,
Chennai, Traffic Jam, Pongal 2023, சென்னை, போக்குவரத்து நெரிசல், பொங்கல் பண்டிகை, Pongal festival,

சென்னை : பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட மக்கள் புறப்பட்டு சென்றால், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் இன்று வழக்கத்தை விட கூட்டம் அலைமோதியது. இரண்டு நாளில் 2.40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளதால், சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது/


latest tamil news


பொங்கல் பண்டிகை ஜன., 15 முதல் 17ம் வரையில் கொண்டாடப்படுகிறது. இதனால், சென்னையில் இருந்து நேற்று முதலே சொந்த ஊர்களுக்கு புறப்படத் துவங்கினர். ஏற்கனவே, முன்பதிவு செய்த பயணியர் இன்று பயணம் மேற்கொண்டனர்.

இதனால், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் வழக்கத்தை விட கூட்டம் அலைமோதியது. தென்மாவட்ட விரைவு ரயில்களின் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம் பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டது. நீண்ட வரிசையில் பயணியர் காத்திருந்து, இடம் பிடித்தனர்.


கடந்த இரண்டு தினங்களில் மட்டும் சென்னையில் இருந்து ரயில்களில் மட்டுமே 2.40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளதாக ரயில் அதிகாிகள் கூறினர்.

பேருந்து பயணம்:


இதே போன்று சொந்த ஊர்களுக்கு பேருந்தில் செல்லும் மக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் படையெடுத்து வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.சென்னை தி.நகர் தொடங்கி கன்னியாகுமரி கல்குளம் வரை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X