வாலாஜாபாத்:வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
பள்ளி நிர்வாகி சாந்தி அஜய்குமார் தலைமை வகித்தார். மண்பானையில் மாணவ, மாணவியர் பொங்கலிட்டனர். வண்ணக் கோலங்களின் நடுவே, செங்கரும்பு நட்டு சமத்துவ பொங்கல் விழா கொண்டாடி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ந்தனர்.
அதைத் தொடர்ந்து, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், வேட்டி, சட்டை மற்றும் சேலையுடன் ஆசிரியர்கள் பங்கேற்று, சூரியனை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, பள்ளி தாளாளர் அஜய்குமார் மற்றும் முதல்வர் தேன்மொழி ஆகியோர் செய்திருந்தனர்.