சிறுபாலத்தில் சாலை சேதம் வாகன ஓட்டிகள் அவதி
காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி, மின் நகரில் பெய்யும் மழை நீர், மஞ்சள் நீர் கால்வாய் வழியாக வெளியேறும் வகையில், திருக்காலிமேடு பிரதான சாலையின குறுக்கே சிறுபாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாலத்தின் வழியாக தினமும் ஆயிரக் கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், சிறுபாலத்தில் ஒரு பகுதி சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.
வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளத்தில் தவறி விழுந்து, விபத்தில் சிக்குகின்றனர். பள்ளம் சிறிய அளவில் இருக்கும்போதே சீரமைப்பதோடு, பாலத்தின் உறுதித்தன்மையையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
- சி.மணிகண்டன், காஞ்சிபுரம்.