வாலாஜாபாத்:பள்ளூர்-சோகண்டி வரையில், மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில், 24 கி.மீ., ஒரு வழிச் சாலை உள்ளது.
இது, 23 அடி சாலையில் இருந்து, 35 அடி இருவழிச் சாலையாக 44 கோடி ரூபாய் செலவில் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.
இதில், கம்மவார்பாளையம், மூலப்பட்டு, கொட்டவாக்கம், பரந்துார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், சாலை ஓரம் மின் கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளன.
இதனால், சில விபத்துகள் ஏற்பட்டு வந்தன. இதை தவிர்க்க, சாலை ஓரம் இருக்கும் மின் கம்பங்களை அகற்ற வேண்டும் என, பல தரப்பு வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்தது.
இந்த கோரிக்கையை ஏற்று, சாலையோரம் இருக்கும் மின் கம்பங்களை, வேறு இடத்திற்கு மாற்றி நடும் பணியை துவக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, மின் கம்பம் நடும் இடத்தில் இடுப்பளவிற்கு பள்ளம் தோண்டும் பணியை செய்து வருகின்றனர்.
ஓரிரு நாட்களில் மின் கம்பங்களை மாற்றி நடும் பணி செய்யப்படும் என, மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.