வாலாஜாபாத்:வாலாஜாபாத் அடுத்து, வில்லிவலம் கிராமம் உள்ளது. இங்கு, 2020 - 21ம் நிதி ஆண்டில், 15வது நிதிக்குழு மானியத்தில், 14 லட்சம் ரூபாய் செலவில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, சில மாதங்களுக்கு முன் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.
இத்தொட்டியை சுத்தம் செய்வதற்கு சவுகரியமாக, மூன்று அடுக்கில், இரும்பால் ஆன ஏணி படிக்கட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. சிமென்ட் பூச்சு உதிர்வு காரணமாக, ஏணி உடைந்து விழுந்தது.
இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து, கட்டுமான பணி ஒப்பந்தம் எடுத்த நபரே, நீர்த்தேக்க தொட்டியில் ஏணி படியை பொருத்தி உள்ளார்.