வாலாஜாபாத்:வாலாஜாபாத் அடுத்த, தேவரியம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், நேற்று நடந்த சமத்துவ பொங்கல் விழாவிற்கு, ஊராட்சித் தலைவர் அஜய்குமார் தலைமை வகித்தார்.
வாலாஜாபாத் பி.டி.ஓ.,க்கள் முத்துசுந்தரம், ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மகளிர் சுய உதவிக் குழுவினர் கோலப் போட்டிகள் மற்றும் தேவரியம்பாக்கம் அரசு பள்ளி மாணவ - மாணவியர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர். அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை எழில், துணைத் தலைவர் கோவிந்தராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.