காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த புத்தேரி கிராமம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர், ரஜினிகாந்த். போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனர். இவருடைய இரண்டாவது மகள் தனிஷியா,16, காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 1 படித்து வந்தார்.
பள்ளியில் ஆங்கில பாடத்தில் பின்தங்கிஇருந்ததாகவும், இதனால் பெற்றோரை அழைத்து வரும்படி ஆசிரியர் கூறியதாக தெரிகிறது. இதனால், சோகமாக இருந்த மாணவி, நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து, அறையில் இருந்த மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மகள் இறந்தது குறித்து, காஞ்சி தாலுகா போலீசில், தந்தை ரஜினிகாந்த் புகார் அளித்துள்ளார். நேற்று காலையில் இருந்து மாணவி படித்த பள்ளிக்கு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.