காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில், குன்றத்துார் ஒன்றியத்தில் மூன்று பணியிடங்களும், உத்திரமேரூர் ஒன்றியத்தில் மூன்று பணியிடங்களும் என ஆறு வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணிக்கு, ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ஆறுமாத கால கணினிப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மகளிர் மேம்பாடு திட்டத்தில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட வட்டாரத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், திட்ட இயக்குனர் என்ற முகவரிக்கு, வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
கலெக்டர் ஆர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.