காஞ்சிபுரம்:திம்மசமுத்திரம் ஊராட்சி, சித்தேரிமேடு சமத்துவபுரத்தில், சமத்துவ பொங்கல் விழா, கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நேற்று நடந்தது.
விழாவில், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், காஞ்சிபுரம் தி.மு.க., ஒன்றியக்குழு சேர்மன் மலர்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதே ஊராட்சியைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவினரால் போடப்பட்ட ரங்கோலி கோலங்கள் பார்வையாளர்களை கவர்ந்தது. இதையடுத்து, கிராம மக்களுடன் கலெக்டர் ஆர்த்தி பொங்கலிட்டார்.
பள்ளி மாணவ -- மாணவியரின் நாட்டிய நிகழ்ச்சி, தெருக்கூத்து, ஓவியப்போட்டி, உறியடித்தல், கயிறு இழுத்தல் ஆகிய போட்டிகள் நடந்தன. போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு, கலெக்டர் ஆர்த்தி பரிசுகளை வழங்கினார்.