உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், குண்ணவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட வெண்டிவாக்கத்தில், 50க்கும் மேற்பட்ட இருளர் குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இதில் பெரும்பாலான குடும்பங்கள், மனை பட்டா இல்லாமல் குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர்.
இவர்களின் கோரிக்கையை ஏற்று, வெண்டிவாக்கத்தில் உள்ள, 10 இருளர் குடும்பத்தினருக்கு நேற்று வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.மேலும், 14 பேருக்கு ஜாதிச் சான்று, ஐந்து குடும்பத்தினருக்கு பொது விநியோக திட்ட குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன.
குண்ணவாக்கம் ஊராட்சித் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் தேன்மொழி பங்கேற்று சான்றுகள் வழங்கினார்.
உத்திரமேரூர் தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.