திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்து, மாவட்டத்தில் உள்ள இந்தியன் வங்கியின் பல்வேறு கிளைகள் வாயிலாக, கல்விக் கடன், மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் தொடங்க கடன், பிரதமர் வேலைவாய்ப்பு கடன் உள்ளிட்ட, 93 பேருக்கு, 8.53 கோடி ரூபாய் மதிப்பில் கடன் வழங்கினார்.
நிகழ்ச்சியில், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் சுசிலா, மாவட்ட தொழில் மைய துணை இயக்குனர் விஜயராணி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.