திருவள்ளூர்:திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், தை பிரம்மோற்சவம், வரும் 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
அதைத் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் உற்சவத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உற்சவர் வீரராகவர் பல்வேறு வாகனங்களில் உலா வருவார்.
விழாவின் முக்கிய நிகழ்வான, 23ம் தேதி, காலை 7:00 மணிக்கு, தேர் வீதி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது. நகரின் நான்கு மாட வீதிகளில் இந்த தேர், வீதி உலா வருகிறது.
கடந்த ஆண்டு, தஞ்சாவூர் அருகே நடைபெற்ற தேர்த் திருவிழாவின் போது, தேர் மின் கம்பத்தில் உரசி மின்சாரம் பாய்ந்து, 11 பேர் இறந்தனர்.
இதையடுத்து, திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் தேரோட்டத்தில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, திருவள்ளூர் சப் - கலெக்டர் மகாபாரதி தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகள் தேரின் உறுதித் தன்மை குறித்து, ஆய்வு செய்தனர்.
நான்கு மாட வீதிகளில் சாலை வசதி, மின் கம்பங்கள் சரியான உயரத்தில் இருக்கிறதா? என ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாஸ்கரன் உட்பட பலர் உடனிருந்தனர்.