ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ராகவநாயுடுகுப்பம் கிராமத்தின், மேற்கு பகுதியில் தாமரைக்குளம் உள்ளது. இந்த குளக்கரையில், விநாயகர், அனுமன் மற்றும் அம்மன் கோவில்கள் அமைந்துஉள்ளன.
கடந்த ஆண்டு, இந்த கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஆண்டு முழுதும் நீர் நிரம்பியுள்ள இந்த குளக்கரையில், தற்போது தென்னை மரக்கன்றுகளை கிராமத்தினர் பங்களிப்புடன் நடவு செய்துள்ளனர்.
நடவுப் பணி மற்றும் குளத்தில் இருந்து தண்ணீர் பாய்ச்சுதல் உள்ளிட்ட பணிகளில், 100 நாள் வேலை தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பாசனத்திற்கு எந்தவித சிக்கலும் இல்லாததால் அடுத்த சில ஆண்டுகளில், குளக்கரையில் தென்னை மரங்கள் நிச்சயம் அணிவகுத்து நிற்கும் என்பது உறுதி என, கிராமத்தினர் தெரிவிக்கின்றனர்.