திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சின்னம்மாபேட்டை ஊராட்சி, தக்கோலம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில், 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
நாளை, பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், நேற்று, அங்கன்வாடி ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர்கள் அங்கு பயிலும் குழந்தைகளுடன் பொங்கல் வைத்து விழாவை கொண்டாடினர்.
அதேபோன்று, தொழுதாவூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல், ஊராட்சி சார்பில் வைக்கப்பட்டது. இதில் பெண்களுக்கு கோலப் போட்டி, ஓவியப் போட்டி உள்ளிட்டவை நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.
திருவாலங்காடு ஊராட்சி கூடல்வாடியில், தனியார் வேளாண் கல்லுாரி மாணவியர் அப்பகுதி விவசாயிகளுடன் பொங்கல் வைத்து விழாவை கொண்டாடினர்.