ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், எஸ்.வி.ஜி.புரம் ஊராட்சியில் அமைந்துள்ளது சமத்துவபுரம் குடியிருப்பு. இங்கு, 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில், 40க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை, தலா 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பணி மேற்கொள்ளப்பட்டது.
அதற்கான பணிகளும் தற்போது செய்து முடிக்கப்பட்டுள்ளது. இதில், 16 குடியிருப்புகளை மறுசீரமைப்பு செய்ததற்கான நிதி இதுவரை அவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது.
இதனால், அதிருப்தியில் உள்ள அவர்கள், நேற்று, சமத்துவபுரத்தில் சமத்துவ பொங்கல் திருவிழா நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழாவிற்காக வரும் அதிகாரிகளை உள்ளே நுழைய விடாதபடி, நுழைவாயில் பகுதியில் தடை ஏற்படுத்தி இருந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வட்டார வளர்ச்சி அலுவலர் அருள், ஆர்.கே.பேட்டை போலீசார் மற்றும் ஊராட்சித் தலைவர் சத்தியராஜ் உள்ளிட்டோர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சு நடத்தினர்.
வரும் 30ம் தேதிக்குள் மறு சீரமைப்பு நிதியை பெற்று தருவதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.