பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், சொரக்காய்பேட்டை கிராமத்தில், முத்தமிழ் அறநெறி சங்கம் சார்பில், பாரதியார் பிறந்தநாளை ஒட்டி, கடந்த டிச., 11ல், பாட்டு, பேச்சு, ஓவியம், நாட்டியம், கதை, கவிதை, கட்டுரை என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு நேற்று சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
சொரக்காய்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில், தலைமையாசிரியர் குமார், மாணவ - மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
வெற்றி பெற்ற மாணவர்களை, ஆசிரியர்கள் வாழ்த்தினர்.