மப்பேடு:கடம்பத்துார், தொடுகாடு கிராமத்தைச் சேர்நதவர் பாபு, 43. இவர், கடந்த 11ம் தேதி, 'ஹோண்டா டியோ' இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்தி விட்டு சென்றார்.
பின் மறுநாள் அதிகாலையில் எழுந்து பார்த்த போது இருசக்கர வாகனம் மாயமானது தெரிய வந்தது.
இதுகுறித்து, மப்பேடு போலீசில், பாபு அளித்த புகாரையடுத்து, போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் இருசக்கர வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ்., கருவியின் வாயிலாக இருசக்கர வாகனம் மணவூர் பகுதியில் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து மப்பேடு போலீசார், மணவூர் ஏரி அருகே இருந்த திருடர்களிடமிருந்து, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து, மப்பேடு காலனிப் பகுதியில் திருடு போன ராமு, 31, என்பவரின், 'பல்சர்' இருசக்கர வாகனத்தைப் போலீசார் மீட்டனர்.
மேலும், இருசக்கர வாகனத்தை திருடியதாக ராணிப்பேட்டை மாவட்டம், மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார், 25, மற்றும் மோசூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல், 23, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும், நேற்று முன்தினம், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.