ஷிவமொகா-சட்டவிரோதமாக நடக்கும் கசாப்பு கடையில், ஏழு பசுக்கள் கொல்லப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடகாவில், பசுவதை தடை சட்டம் அமலில் உள்ளது. ஆனால் சட்டத்தை மீறி, மாநிலத்தின் பல இடங்களில், பசுக்கள் வெட்டப்படுவது வெளிச்சத்துக்கு வருகிறது. போலீசாரும் அவ்வப்போது சோதனை நடத்தி, மாடுகளை மீட்கின்றனர்.
ஷிவமொகா புறநகரின், சூளேபைலுவில் அஜீஜ் என்பவர் வீட்டின் பின் பகுதியில், அதிகாலையில் சட்ட விரோதமாக பசுக்கள் வெட்டப்படுவதாக தகவல் வந்தது. துங்கா நகர் இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் தலைமையிலான போலீசார், மாநகராட்சி அதிகாரிகள், நேற்று அதிகாலை 5:30 மணியளவில் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினர்.
ஆனால் அதற்குள், ஏழு பசுக்கள் வெட்டப்பட்டன. போலீசாரை பார்த்த ௩௫ - ௪௦ வயதுக்குட்பட்ட சிலர் தப்பியோடி விட்டனர். அங்கு மிச்சமிருந்த, 10 பசுக்களை போலீசார் மீட்டு கோசாலைக்கு அனுப்பினர்.
தப்பியோடிய நபர்கள் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.