மைசூரு,-தம்மனகட்டே வனப்பகுதி சபாரியில் இரண்டு வாரங்களாக, நான்கு குட்டிகளுடன் ஒரு பெண் புலி, வலம் வருகிறது.
மைசூரு, எச்.டி.கோட்டேவின் நாகரஹொளே தேசிய பூங்காவின், அந்தரசந்தே அருகில் உள்ள தம்மனகட்டே வனப்பகுதியில், இரண்டு வாரமாக புலி, தன் நான்கு குட்டிகளுடன் வலம் வருகிறது. சபாரியில் தினமும் காணப்படுவதால், சுற்றுலா பயணியர் குவிகின்றனர். தாய்ப்புலி, குட்டிகளுடன் விளையாடுவதை பார்த்து ரசிக்கின்றனர்.
பொதுவாக புலிகள், சுற்றுலா பயணியருக்கு காட்சி தருவது அபூர்வம். அடர்த்தியான மரங்கள், புதர்களில் மறைந்திருக்கும். தற்போது, பகல் நேரத்தில் கடும் வெயில் அடிப்பதால், வனத்தில் மரம், செடி, கொடிகள் காய்கின்றன. இதனால் சபாரி செல்வோரால், புலிகளை பார்க்க முடிகிறது. வனத்தில் குட்டிகளுக்கு புலி, வேட்டையாட கற்றுத்தரும் போட்டோ, சமூக வலைதலங்களில் பரவியுள்ளது.