ஷிவமொகா-கடன் தொல்லை தாங்காமல், வளர்ப்பு மகனுடன், தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.
ஷிவமொகாவின் மிளகட்டாவில் வாடகை வீட்டில் வசித்தவர் பிரதாப், 70. இவரது மனைவி தானம்மா, 63. குழந்தை இல்லாத இவர்கள், மஞ்சுநாத், 25, என்பவரை தத்தெடுத்து வளர்த்தனர்.
வளர்ப்பு மகனுக்கு, பக்கவாதம் ஏற்பட்டது. பிரதாப்புக்கு வயதாகி விட்டதால், வேலை செய்ய முடியவில்லை. தானம்மா கூலி வேலை செய்து, குடும்பத்தை நடத்தினார். இந்த வருவாய் போதவில்லை. வாடகை கட்ட முடியாமல் அவதிப்பட்டனர்.
குடும்ப தேவைக்காக, பல இடங்களில் கடன் வாங்கினர். கடன் சுமை அதிகரித்தது. கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்தனர். இதனால் மனம் நொந்த தம்பதி மற்றும் மஞ்சுநாத் நேற்று காலை உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு, தற்கொலை செய்து கொண்டனர்.
***