கோலார்,-''கோலாரில் முஸ்லிம்களின் 40 ஆயிரம் ஓட்டுகள் உள்ளன. இவர்கள் வெற்றி பெற வைப்பர் என கருதி, இந்த தொகுதியை சித்தராமையா தேர்வு செய்துள்ளார். இங்கு பா.ஜ., மற்றும் ம.ஜ.த., இடையே நேரடி போட்டி உள்ளது. காங்கிரஸ் கணக்கிலேயே இல்லை,'' என தோட்டக்கலைத்துறை அமைச்சர் முனிரத்னா தெரிவித்தார்.
கோலாரில் நேற்று அவர் கூறியதாவது:
'ஒரு தொகுதியில் நின்றால் மட்டுமே, சித்தராமையா வெற்றி பெறுவார்' என, மாநில காங்., தலைவர் சிவகுமாரின் குல தெய்வம் கூறியுள்ளது. ஆனால், சித்தராமையாவின் குல தெய்வம், இரண்டு இடங்களில் போட்டியிடும்படி, அருள் வாக்கு கூறியுள்ளது.
சிவகுமாரின் குல தெய்வத்தின் பேச்சை கேட்டு, கோலார் தொகுதியில் போட்டியிடும் எண்ணத்தை, சித்தராமையா கை விடுவது நல்லது. இல்லையென்றால், சிவகுமாரின் குல தெய்வம் என்ன செய்யுமோ தெரியாது.
கோலார் எம்.எல்.ஏ.,வும், உள்ளூர் தலைவர்களும் சித்தராமையாவை திசை மாற்றுகின்றனர். அவரை தோற்கடிக்க வேண்டும் என, 'உள்குத்து' வேலை செய்கின்றனர். இதை புரிந்து கொண்டால், தன் எதிரி யார் என்பது தெரியும்.
கோலாரில் முஸ்லிம்களின் 40 ஆயிரம் ஓட்டுகள் உள்ளன. இவர்கள் வெற்றி பெற வைப்பர் என கருதி இத்தொகுதியை சித்தராமையா தேர்வு செய்துள்ளார். ஆனால், இங்கு பா.ஜ., மற்றும் ம.ஜ.த., இடையே தான் நேரடி போட்டி உள்ளது. காங்கிரஸ் கணக்கிலேயே இல்லை.
பொங்கல் பண்டிகை முடிந்த பின், கோலார் மாவட்ட தொகுதிகளுக்கு, பா.ஜ., வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர். முல்பாகல் தொகுதி எம்.எல்.ஏ., நாகேஷ், பா.ஜ., சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறவில்லை. சுயேச்சை எம்.எல்.ஏ.,வாக, பா.ஜ.,வுடன் அடையாளம் காணப்பட்டார்.
கட்சிக்கு ஆதரவளித்ததால், அவரை அமைச்சராக்கினோம். அதன்பின் கார்ப்பரேஷன் , வாரிய தலைவராக்கினோம். என்ன நோக்கத்துக்காக, எங்களை விட்டு செல்கிறார் என்பது தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
****