இந்திராநகர்,-கர்நாடக தேவர் சங்கத்தின் புதிய தலைவர் வி.சுப்பையா தலைமையில், பெங்களூரு இந்திரா நகரில் முதல் செயற்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், 2023ம் ஆண்டுக்கான சங்கத்தின் வளர்ச்சியை எப்படி கொண்டு செல்லலாம், கே.டி.எஸ்., கூட்டுறவு வங்கியை எப்படி முன்னேற்றலாம் என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
இதே வேளையில், கடந்த செயற்குழு கூட்டத்தில் நடந்த வரவு - செலவு கணக்குகள் ஒப்படைக்கப்பட்டன. முதல் முறையாக, சங்கத்தின் தலைவர் தலைமையில் ஆயுள் கால மற்றும் வருடாந்திர உறுப்பினர்களிடம் இருந்து வசூல் செய்யப்பட்ட 50 ஆயிரம் ரூபாய், வங்கியில் நிரந்தர வைப்புத் தொகையாக வைக்கப்பட்டது.
கூட்டத்தில், கே.டி.எஸ்., கூட்டுறவு வங்கி தலைவர் ச.ஞானகுரு, முன்னாள் தலைவர் கே.பாபு, துணைத் தலைவர்கள் பூபதி, கனகராஜ், பொதுச் செயலர் ரவீந்திரன், பொருளாளர் கருப்பசாமி, ஒருங்கிணைப்புத் தலைவர் தன்ராஜ் தேவர் உட்பட பலர் பங்கேற்றனர்.