விபச்சார மன்னன் 'சான்ட்ரோ' ரவி குஜராத்தில் கைது: பெரும் கலக்கத்தில் கர்நாடகாவின் முக்கிய புள்ளிகள்

Updated : ஜன 14, 2023 | Added : ஜன 13, 2023 | |
Advertisement
அரசியல் புள்ளிகள், அதிகாரிகள், செல்வாக்கு மிக்க நபர்களுக்கு பெண்களை அனுப்பி விபச்சாரம் செய்து வந்த மைசூரை சேர்ந்த 'சான்ட்ரோ' ரவி குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் நேற்று கைது செய்யப்பட்டார். இதனால் அவருடன் தொடர்பில் இருந்த முக்கிய புள்ளிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.மைசூரு விஜயநகரை சேர்ந்த, 40 வயது பெண், தன் கணவர் மஞ்சுாத் எனும் 'சான்ட்ரோ' ரவி, 50, தன்னை பாலியல் ரீதியாக
விபச்சார மன்னன் 'சான்ட்ரோ' ரவி குஜராத்தில் கைது: பெரும் கலக்கத்தில் கர்நாடகாவின் முக்கிய புள்ளிகள்


அரசியல் புள்ளிகள், அதிகாரிகள், செல்வாக்கு மிக்க நபர்களுக்கு பெண்களை அனுப்பி விபச்சாரம் செய்து வந்த மைசூரை சேர்ந்த 'சான்ட்ரோ' ரவி குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் நேற்று கைது செய்யப்பட்டார். இதனால் அவருடன் தொடர்பில் இருந்த முக்கிய புள்ளிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

மைசூரு விஜயநகரை சேர்ந்த, 40 வயது பெண், தன் கணவர் மஞ்சுாத் எனும் 'சான்ட்ரோ' ரவி, 50, தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, உயிரை கொல்லும் நோய் பரப்பி, வரதட்சணை கொடுமை செய்வதாக இம்மாதம் 4ம் தேதி விஜயநகரா போலீசில் புகார் செய்தார். எப்.ஐ.ஆர்., பதிவானதும், 'சான்ட்ரோ' ரவி தலைமறைவானார். இதற்கிடையில், அவரது சுய ரூபம் தெரிய ஆரம்பித்தது.


கார்களின் பெயர்இவர், பிரபல அரசியல் புள்ளிகள், உயர் அதிகாரிகள், செல்வாக்கு மிக்க தலைவர்களுக்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பெண்கள் வரவழைத்து விபச்சாரம் நடத்தியுள்ள அதிர்ச்சி தகவல் வெளியானது. அதுவும் ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரபல கார்களின் பெயரை சூட்டி, வாடிக்கையாளர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளார்.

வேலை வாங்கி தருவதாக கூறி, பல பெண்களை ஏமாற்றி விபச்சாரத்தில் தள்ளியுள்ளார். முதல்வர் பசவராஜ் பொம்மை மகன் உட்பட பல்வேறு அரசியல் புள்ளிகளுடன் போட்டோ எடுத்து கொண்டு, தனக்கு செல்வாக்கு இருப்பதாக நாடகம் ஆடியுள்ளார்.

தன் செல்வாக்கை பயன்படுத்தி, அரசு அதிகாரிகளையும் இடமாற்றம் செய்து, பணம் பறித்துள்ளார். விலை உயர்ந்த கார்களை வாங்கி குவித்துள்ளார். இந்த தகவல் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


சிறப்பு படைகள்


இந்நிலையில், அவரை பிடிக்க மாண்டியா, ராம்நகர், மைசூரு, ராய்ச்சூர் மாவட்ட எஸ்.பி.,க்கள் தலைமையில் மூன்று சிறப்பு படைகள் அமைக்கப்பட்டன. கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா, தமிழகம், கோவா உட்பட பல்வேறு மாநிலங்களில் தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கிடையில், 10 நாட்களுக்கு பின், குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் 'சான்ட்ரோ' ரவி நேற்று கைது செய்யப்பட்டார். அவரது கூட்டாளிகள் ராம்ஜி, 42, சதீஷ், 36, மதுசூதன், 40, ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.


மாறுவேடம்


இது குறித்து, மைசூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கர்நாடக சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., அலோக் குமார் நேற்று மாலை கூறியதாவது:

மந்த்ராலயா கோவிலுக்கு வந்த ரவியின் கூட்டாளி சேத்தன் என்பவர் இம்மாதம் 12ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணைப்படி, குஜராத் போலீஸ் உதவியுடன் ஆமதாபாத்தில் ரவியும், அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர். அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக, விக் எனும் செயற்கை முடியை எடுத்து விட்டு, மீசையையும் எடுத்துள்ளார்.

மேலும், தினமும் சிம் கார்டுகளை மாற்றியதால் அவரை கைது செய்ய தாமதமானது. அவரை கைது செய்து, கர்நாடக போலீஸ் மானத்தை காப்பாற்றியுள்ளனர். ஏற்கனவே அவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் 28 வழக்குகள் பதிவாகியுள்ளன. கிரிமினல் வழக்கு ஒன்றில், 2005ல் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 11 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார். கைது செய்த போலீசாருக்கு அரசு சார்பில் ரொக்க பரிசு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

குஜராத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 'சான்ட்ரோ' ரவி அழைத்து வரப்படுவார். அவரிடம் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும். எந்தெந்த அரசியல்வாதி, அதிகாரிகள் தொடர்பு வைத்திருந்தாலும் விசாரிக்கப்படுவர்.

- அரக ஞானேந்திரா, அமைச்சர், உள்துறை'சான்ட்ரோ' ரவியை கைது செய்தது சமாதானமாக உள்ளது. போலீசாருக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவருக்கு கடும் தண்டனை கிடைக்க வேண்டும்.

'சான்ட்ரோ' ரவியின் மனைவி


- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X