கலபுரகி,-குடும்ப தகராறில், தாக்குதல் நடத்திய வழக்கு தொடர்பாக, ஏழு பேருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்துஅப்சல்புராவின், இரண்டாவது கூடுதல் ஜெ.எம்.எப்.சி.,நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கலபுரகி அப்சல்புராவின் கத்தரகா கிராமத்தில் வசிக்கும் சுபாஷ் கும்பாரா மற்றும் சந்தப்பா மல்லேஷப்பா பேலுரா இடையே, குடும்ப தகராறு இருந்தது. 2014ல் டிசம்பர் 12ல்,இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் நடந்தது. அப்போது சந்தப்பாவை சார்ந்தவர்கள், சுபாஷ் குடும்பத்தினரை தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது தொடர்பாக, வழக்கு பதிவு செய்த அப்சல்புரா போலீசார், சந்தப்பா, குண்டப்பா சித்தப்பா ஹூகாரா,லட்சுமண் பகவந்த்ராயா குரி, எல்லப்பா சரணப்ப அவுராத், ராகப்பா அன்னப்பா அவுராத், தத்தப்பா பசப்பா அவுராத், சிவப்பா ஈரப்பா அவுராத் ஆகியோரை, கைது செய்தனர்.
அப்சல்புராவின், இரண்டாவது கூடுதல் ஜெ.எம்.எப்.சி.,நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
விசாரணையில் இவர்களின் குற்றம் உறுதியானதால், ஏழு பேருக்கும் ஆறு மாதம் சிறை தண்டனை, தலா 3,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.அபராத தொகையில், 10 ஆயிரம் ரூபாயை,புகார்தாரருக்கும், 11 ஆயிரம் ரூபாயை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது.