ஜீவன்பீமா நகர்,-சி.வி.ராமன்நகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., ரகு, தொகுதிகுட்பட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசாக கரும்புகள் வழங்கினார்.
பெங்களூரில் தமிழர்கள் அதிகமாக உள்ள சட்டசபை தொகுதிகளில், சி.வி.ராமன்நகரும் ஒன்று. இத்தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் பா.ஜ.,வின் எஸ்.ரகு.
பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஜீவன்பீமாநகர், ஆனந்தபுரம், சுதாம்நகர், கோடிஹள்ளி, மர்பிடவுன், பின்னமங்களா, ஜெயராஜ்நகர் உட்பட தொகுதியில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் நேற்று கரும்பு பரிசாக வழங்கினார்.
பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்களுக்கு, தலா ஒரு ஜோடி கரும்புகள் வழங்கி, பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.
லட்சுமிபுரம், பென்னிகானஹள்ளி, மல்லேஸ்பாளையா, கோனேன அக்ரஹாரா, காக்ஸ்டவுன், பையப்பனஹள்ளி ஆகிய பகுதிகளில் இன்றும் கரும்புகள் வழங்குகிறார்.