பெங்களூரு,-தன்னுடைய நாயை 15 நாட்களாக காணவில்லை என கன்னட நடிகை சுதா ராணி 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கன்னடத்தில் 'ஆனந்த'' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை சுதாராணி, தமிழில் 'வசந்த கால பறவைகள்' உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். பெங்களூரு மல்லேஸ்வரத்தில் வசித்து வரும் இவர், தனது வீட்டில் இரண்டு 'கோல்டன் ரெட்ரீவர்' வகை நாய்களை வளர்க்கிறார். அதுமட்டுமின்றி தான் குடியிருக்கும் பகுதியில் நடமாடிய நாயையும் 'கங்கம்மா' என பெயரிட்டு வளர்க்கிறார்.
இந்த நாயை 15 நாட்களாக காணவில்லை. இது குறித்து பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும், கிடைக்கவில்லை என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாயின் போட்டோவுடன் பதிவிட்டுள்ளார்.
அதில், 'எங்கள் நாய் கங்கம்மாவை 15 நாட்களாக காணவில்லை.உங்கள் ஏரியாவில் இருந்தால் தயவு செய்து எனக்கு தகவல் தெரிவியுங்கள். இது எனது தனிப்பட்ட வேண்டுகோள். கங்கம்மா கருப்பு மற்றும் வெள்ளை நிறம் கொண்டது.
'பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் கிடைக்கவில்லை. அவர்களும் கண்டு பிடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறி உள்ளார்.