பெங்களூரு,-கர்நாடக சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரிக்கு, சிர்சியில் நாளை பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆறு முறை எம்.எல்.ஏ.,வான சபாநாயகர் பணியாற்றும் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரிக்கு, சிர்சி தொகுதியில் ஏராளமான விசுவாசிகள் உள்ளனர்.இவர்கள் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரிக்கு, பாராட்டு விழா ஏற்பாடு செய்துள்ளனர்.
சிர்சியின் மாரிகாம்பா பி.யு., கல்லுாரி வளாகத்தில்,நாளை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. காலை 10:00 மணிக்கு துவங்கும். முதல்வர் பசவராஜ் பொம்மை, துவக்கி வைப்பார். முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும் பங்கேற்கிறார்.
முக்கிய விருந்தினர்களாக, சட்டமேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, மத்திய விவசாயம், விவசாயிகள்நலத்துறை இணை அமைச்சர் ஷோபா, வருவாய்த்துறை அமைச்சர் அசோக், சமூக நலத்துறை அமைச்சர் கோட்டா சீனிவாச பூஜாரி, சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் உட்பட, பலர் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.