சென்னை,-பெங்களூரு, விஸ்வேஸ்வரைய்யா முனையமான, எஸ்.எம்.வி.டி.,யில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கர்நாடக மாநிலம் எஸ்.எம்.வி.டி., பெங்களூரில் இருந்து, நாளை இரவு 11:00 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில், மறுநாள் அதிகாலை 5:00 மணிக்கு, சென்ட்ரல் வந்தடையும்
கேரளா மாநிலம் கொல்லத்தில் இருந்து, நாளை அதிகாலை 3:15 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில், அதே நாளில் மாலை 6:30 மணிக்கு, எஸ்.எம்.வி.டி., பெங்களூருக்கு இயக்கப்பட உள்ளது.
சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக, இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு துவங்கியுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.