ஹனுமந்த் நகர்,--பெங்களூரு ஹனுமந்தநகரில் வாலிபர் ஒருவர், அரிய வகை உயிரினமான எறும்பு தின்னியின் செதில்களை கடத்த முயற்சிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் கிரண், 27 என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 கிலோ எடையுள்ள எறும்பு தின்னி செதில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த செதில்கள் மருந்துகள் தயாரிக்கவும், அலங்கார பொருட்கள், ஆடைகள் தயாரிக்க பயன்படுவதால் வெளிநாடுகளில் கிராக்கி உள்ளது. கிலோ 90 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி பறிமுதல் செய்யப்பட்ட எறும்பு தின்னி செதில்களின் மதிப்பு 30 லட்சம் ரூபாய் ஆகும்.
மேற்கு தொடர்ச்சி மலை காடுகளில் வசிக்கும் இந்த எறும்பு தின்னியை, கைது செய்யப்பட்ட கிரண் சட்ட விரோதமாக வேட்டையாடி உள்ளார்.
வெளிநாட்டுக்கு கடத்த இருந்ததும் தெரியவந்தது. இதில் தொடர்புடைய மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.