சாத்துார்,--இருக்கன்குடி கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற அ.தி.மு.க.முன்னாள் நகரச் செயலாளர் என்.எஸ்.வாசன் மீது அரசு டவுன் பஸ் மோதியதில் படுகாயமடைந்தார்.
சாத்தூர் அ.தி.மு.க முன்னாள் நகரச் செயலாளர் என். எஸ். வாசன் . நேற்று காலை 6:30 மணி அளவில் சாத்தூரில் இருந்து என். எஸ். வாசன் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றார்.
சாத்தூர் - நென்மேனி ரோட்டில் அர்ச்சுனா நதி பாலம் அருகே நடந்து சென்றபோது, சாத்தூரில் இருந்து வேடப்பட்டிக்குச் சென்ற அரசு பஸ் மோதியதில் காயமடைந்தார்.
மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசு டவுன் பஸ் டிரைவர் கள்ளிக்குடி வெங்கட்ரமேஷ் மீது வழக்குப்பதிந்து அம்மாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.