சிவகாசி,--சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி மாணவர் பேரவை சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது கல்லூரி தலைவர் திலகவதி செயலர் அருணா முதல்வர் பழனீஸ்வரி தலைமை வகித்தனர். கல்லுாரி மாணவர் பேரவை ஒருங்கிணைப்பாளர் கவிதா வரவேற்றார். மாணவிகள், பேராசிரியர்கள் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர். போட்டிகள்,கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மாணவர் பேரவை தலைவர் உஷாராணி நன்றி கூறினார்.
* சிவகாசி ஹயக்ரீவாஸ் சர்வதேச பள்ளியில் பள்ளி தலைவர் வெங்கடேஷ் பிரசாத் வரவேற்றார். பள்ளி தலைமை முதல்வர் பாலசுந்தரம், தாளாளர் ஜெயக்குமார், முதல்வர் அம்பிகா தேவி பேசினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி துணை முதல்வர்கள் ஞான புஷ்பம், சுதா, ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
*சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லுாரியில் கல்லுாரி முதல்வர் தீபிகா ஸ்ரீ தலைமை வகித்தார். இயக்குனர் நந்தநிலா குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். மாணவி அருள்மொழி இறைவணக்கம் பாடினார்.
மாணவி சிவசக்தி வரவேற்றார். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் சிவகாசி டைமண்ட் தலைவர் தயாநிதி, பாஸ்கரன், அனிதா கலந்து கொண்டனர். மாணவிகள் ஜெப கிரேசி, பவித்ரா தொகுத்து வழங்கினர் மாணவி ஜானகி நந்தினி நன்றி கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம், சேர்மன் குமரேசன் தலைமையில் நடந்தது. மேனேஜிங் டிரஸ்டி டாக்டர் சித்ரா, நிர்வாகி அரவிந்த், நிர்வாக அலுவலர் அமுதா, ஆலோசகர் பாரதி, முதல்வர் அனுசுயா, துணை முதல்வர் சவுந்தரி முன்னிலை வகித்தனர். ஆசிரியர்கள், மாணவர்கள் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர்.
* ஸ்ரீவில்லிபுத்தூர் வள்ளுவர் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் சிவக்குமார் தலைமையில் நடந்தது. தலைமை ஆசிரியர் சுபாஷ் சந்திரபோஸ் முன்னிலை வகித்தார். நிர்வாக அலுவலர் சந்தனம் வழி நடத்த ஆசிரியர்கள், மாணவர்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
* ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள பல்வேறு இல்லம் தேடி கல்வி மையங்களில் சமத்துவ பொங்கல் விழா, ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் தலைமையில் நடந்தது. மாணவ, மாணவியர்கள் மத்தியில் தன்னார்வலர்கள், சமத்துவ பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.
* ஸ்ரீவில்லிபுத்தூர் லைன்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா, தாளாளர் வெங்கடாசலபதி தலைமையில் நடந்தது. பள்ளி நிர்வாகிகள், லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். மாணவி மகாலட்சுமி வரவேற்றார். முதல்வர் முருகன், பொங்கல் பண்டிகை சிறப்பு குறித்து பேசினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவி ராஜேஸ்வரி நன்றி கூறினார்.
* சமத்துவபுரத்தில் பொங்கல் விழா: ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் செம்பட்டையன்கால் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் ஒன்றிய குழு தலைவர் மல்லி ஆறுமுகம் தலைமையில், பொங்கல் விழா நடந்தது. ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் பங்கேற்றனர். போட்டியகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. அனைத்து ஊராட்சிகளிலும் சமத்துவ பொங்கல் விழா, ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் நடந்தது.
* காரியாபட்டி செயின்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தாளாளர் கீதா தலைமையில், முதல்வர் இமாகுலேட் முன்னிலையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
துணை முதல்வர் கயல்விழி, ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
* காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் நிறுவனர் முகமது ஜலில் தலைமை வகித்தார். நிர்வாக அதிகாரிகள் சீனி முகைதீன், சீனி முகமது அலியார், நிலோபர் பாத்திமா, நாசியா பாத்திமா முன்னிலை வகித்தனர். முதல்வர் செந்தில்குமார், பேராசிரியர்கள், மாணவர்கள் ஒருங்கிணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.
கலை நிகழ்ச்சிகள் நடந்தன.