சாத்துார்--சாத்துார் மேட்டமலையில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் மோதியதில் ரோட்டின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த 6
பேர் படுகாயம் அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாண்டவர்மங்கலத்தை சேர்ந்தவர் மைக்கேல், 30 . காரில் சிவகாசிக்கு சென்று கொண்டிருந்தார்.
நேற்று மாலை 6:00மணி அளவில் மேட்டமலை மெயின் ரோட்டில் சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் வடக்கு பக்கம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதில்
மேட்டமலையைச் சேர்ந்த அருண்குமார், 22. சூர்யா, 26. கார்த்திக், 26. நந்தகுமார், 22. கார்த்திக், 35. சென்பகராஜ், 35. ஆகியோர் படுகாயம் அடைந்தனர். சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சாத்தூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.