திருச்சுழி,--திருச்சுழியில் வெளிநாட்டினருடன் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
திருச்சுழியில் மாவட்ட அளவிலான பொங்கல் விழா நடந்தது. இதற்கு ஒன்றிய தலைவர் பொன்னுத்தம்பி, திட்ட இயக்குனர் திலகவதி தலைமை வகித்தனர். விருதுநகர் மாவட்ட சுற்றுலாத்துறை வளர்ச்சி அலுவலர் அன்பரசு முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஆப்பாட்டோ லண்டனைச் சேர்ந்த டாபி இருவரும் கலந்து கொண்டனர்.
தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளை உண்டு ரசித்தனர். பின்னர் கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், கரகாட்டம், ஒயிலாட்டம் ஆகியவற்றையும் கண்டு களித்தனர்.
இது குறித்து இருவரும் கூறியதாவது, தமிழ்நாட்டில் செய்யப்படும் பொங்கல் சுவையாக உள்ளது. விதவிதமான தானியங்கள் காய்கறிகளையும் பார்த்தோம். நிகழ்ச்சிகள் எல்லாம் கலர்ஃபுல்லாக இருந்தது. நடனம், நாட்டியம் கிராமிய கலாச்சாரத்தோடு இருந்தது என்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் போத்திராஜ், காமேஸ்வரி கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஸ்பீச் தொண்டு நிறுவனத்தினர் செய்திருந்தனர்.