கீழக்கரை,--கீழக்கரை நாராயண சாமி கோயிலில் ஐயப்ப பக்தர்கள் 120 பேர் இருமுடி கட்டி சபரிமலை யாத்திரை செல்வதற்காக பஸ்சில் ஏறினர்.
அப்போது கீழக்கரை 14வது வார்டு கவுன்சிலர்முகம்மது ஹாஜா சுஐபு 35, சபரிமலை யாத்திரை செல்லும் 120 ஐயப்ப பக்தர்களுக்கு பிஸ்கட், தண்ணீர் பாட்டில், பழங்கள் வழங்கி வழியனுப்பி வைத்தார். ஐயப்ப பக்தர்கள் சரண கோஷம் முழங்க யாத்திரை துவங்கினர்.
கவுன்சிலர் முகம்மது ஹாஜா சுஐபு கூறுகையில், மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக ஐயப்ப பக்தர்களுக்கு என்னால் முடிந்த சிறிய பங்களிப்பை செய்கிறேன். சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமை எப்போதும் நமக்கு நண்பர்களாக விளங்கும், என்றார்.