பரமக்குடி,-பரமக்குடியில் பொங்கல் கொண்டாட்டத்திற்காக ஜோடி கரும்பு 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
தைப்பொங்கல் விழா ஜன.15ல் கொண்டாடப்படுகிறது. அடுத்த நாள் மாட்டுப்பொங்கல், உழவர் திருநாள் வருகிறது.
இந்த கொண்டாட்டத்திற்காக பரமக்குடியில் புதிய அடுப்பு, பானை, மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை களை கட்டியது.
ரேஷன் கடைகளில் காடுதாரர்களுக்கு முழு கரும்பு வழங்கப்பட்டாலும், கடை வீதிகளில் ஜோடி கரும்பு 100 ரூபாய்க்கு மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.