ஆர்.எஸ்.மங்கலம், ;ஆர்.எஸ்.மங்கலத்தில் சனிக்கிழமை தோறும் நடக்கும் வாரச் சந்தைக்கு மதுரை, தேனி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைப்பதால் ஆர்.எஸ்.மங்கலத்தை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் சந்தையில் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
கூட்டத்தை சாதகமாக பயன்படுத்தும் வியாபாரிகள் எடை மோசடி செய்கின்றனர். ஒரு கிலோ காய்கறி அல்லது பழங்கள் வாங்கினால் 800 முதல் 900 கிராம் மட்டுமே இருப்பதாக புகார் எழுந்துஉள்ளது.
எனவே, வியாபாரிகள் வாரச் சந்தையில் டிஜிட்டல் தராசு பயன்படுத்த அறிவுறுத்துவதுடன், எடை மோசடியில் ஈடுபடும் வியாபாரிகள் மீது தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தினர்.