திருப்புத்தூர்,--திருப்புத்தூரில் வங்கிக் கணக்கை புதுப்பிப்பதாக கூறி போனில் பெண்ணிடம் பேசி ஏடிஎம் விபரங்களை கேட்டு ரூ.23 ஆயிரம் பறிபோனது.
திருப்புத்தூர் அக்ரஹார தோப்புத்தெருவைச் சேர்ந்தவர் ரஞ்சிதமேரி. இவருக்கு ஜன.12 மதியம்12:30 மணிக்கு அலைபேசி அழைப்பு வந்துள்ளது.ரஞ்சிதமேரி வங்கிக் கணக்கு வைத்துள்ள வங்கியிலிருந்து மேலாளர் பேசுவதாக கூறியுள்ளார். வங்கிகணக்கை புதுப்பிக்க கணக்கு எண், ஏ.டி.எம்.எண் விபரங்களை கேட்டு வாங்கியுள்ளார். பின்னர் மீண்டும் ரஞ்சிதமேரியிடம் ஓ.டி.பி.விபரங்களையும் வாங்கியுள்ளார். இரவு அலைபேசி செயலி மூலம் அவர் பணம் பரிமாற்றம் செய்ய முயன்ற போது கணக்கில் பணம் குறைந்தது தெரிந்தது.
நேற்று வங்கிக்கு சென்று பணம் இருப்பை சரிபார்த்த போது அவரது கணக்கில் இருந்து ரூ 23 ஆயிரம் எடுக்கப்பட்டது தெரிந்தது. இது குறித்து கிளை மேலாளரிடம் விசாரித்த போது அலைபேசியில் பேசிய நபர் பணத்தை எடுத்தது தெரிந்தது. வங்கியிலும், டவுன் போலீசிலும் இது குறித்து அவர் புகார் செய்தார். பேசியவர் ஆண் என்பதும், வேறு மொழிக்காரர் என்பதும் தெரியவந்துள்ளது.