திருப்புவனம்,--திருப்புவனத்தில் கோயில் மாடுகளை அப்புறப்படுத்தாமல்கலெக்டர் உத்தரவிட்டதாக தி.மு.க.,வினர் போஸ்டர் ஒட்டியதற்கு கவுன்சிலர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருப்புவனத்தில் ரோட்டில் வலம் வரும் கோயில் மாடுகளால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். கோயில் மாடுகளை அப்புறப்படுத்த வலியுறுத்தி வர்த்தகர் சங்கம், பல்வேறு கட்சியினர் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் தி.மு.க., சார்பாக கோயில் மாடுகளை அப்புறப்படுத்த உத்தரவிட்ட கலெக்டருக்கு நன்றி என நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டது. நேற்று நடந்த பேரூராட்சி கூட்டத்தில் த.மா.கா., கவுன்சிலர் அயோத்தி, பாரத்ராஜா, பா.ஜ.,செல்வராஜ் உள்ளிட்டோர் கலெக்டர் உத்தரவை காட்ட கோரி கோஷமிட்டனர்.
பதிலளித்த செயல் அலுவலர் ஜெயராஜ் கலெக்டர் உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றார்.போஸ்டர் ஒட்டியதை கண்டித்து த.மா.கா., பா.ஜ., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தலைவர் சேங்கைமாறன் கூறுகையில், பேரூராட்சி சார்பில் ஒட்டப்படவில்லை,கோயில் மாடுகளை அப்புறப்படுத்த தீர்மானம் நிறைவேற்றி அனுப்ப உள்ளோம், கலெக்டர் உத்தரவிற்குபின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
துணை தலைவர் ரஹ்மத்துல்லா, செயல் அலுவலர் ஜெயராஜ், கணக்காளர் நாகராஜன், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
Advertisement