திருப்புவனம்,-கீழடியில் அருங்காட்சியகம் 11 கோடியே மூன்று லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டு இம்மாத இறுதியில் திறக்கப்பட உள்ளது. அருங்காட்சியகத்தை பார்வையிட பார்வையாளர்கள் வர உள்ளனர்.
2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முந்தைய நகர நாகரீகத்தை காண வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக நான்கு வழிச்சாலையில் இருந்து அருங்காட்சியகத்திற்கு செல்லும் பாதை உயரப்படுத்தும் பணி நடந்து வருகிறது.