காரைக்குடி,--தேவகோட்டை அருகே உள்ள கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் 40. இவர் தடை செய்யப்பட்ட 6 கிலோ 600 கிராம் புகையிலை பொருட்களை விற்பனை செய்துள்ளார்.
சாக்கோட்டை போலீசார், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து முருகேசனையும் கைது செய்தனர். அதேபோல் காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் 38.
இவர் கண்டனூரில் உள்ள கடையில், 1 கிலோ 650 கிராம் புகையிலை பொருட்களை, சட்டவிரோதமாக விற்பனை செய்ததால் அவரையும் போலீசார் கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement