சென்னை, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிக்காக, 98 லட்சம் ரூபாய் மதிப்பில், 200 கைத்தெளிப்பான்கள் மற்றும் ஆறு 'ட்ரோன்' இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.
இந்த இயந்திரங்களை அமைச்சர்கள் நேரு, சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர், ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்த நிகழ்வில், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினர். தொடர்ந்து, வீடுகளில் சேகரிக்கப்படும் மக்கும், மக்காத குப்பையை தரம் பிரித்து வாங்க,'பேட்டரி'யால் இயக்கப்படும் வாகனங்களில் பயன்படுத்தப்படும் பச்சை மற்றும் நீல நிறத்திலான, 20 ஆயிரம் குப்பைத் தொட்டிகளை, அமைச்சர்கள் பார்வையிட்டு மண்டலங்களுக்கு அனுப்பினர்.
இந்நிகழ்வில், மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.