இளையான்குடி,--இளையான்குடி பேரூராட்சி பகுதிகளில் புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட மக்கள் ஒத்துழைக்க வேண்டுமென்று பேரூராட்சி தலைவர் நஜூமுதீன், செயல் அலுவலர் கோபிநாத் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இளையான்குடியில் பொதுமக்கள் தங்களிடமுள்ள பழைய டயர்கள், பாய்கள், மெத்தைகள், தலையணைகள், துணிகள், மற்றும் தேவையில்லாத பொருட்களை பொது இடங்களில் கொட்டுவதும், எரிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.
ஆகவே மக்கள் தங்களிடம் உள்ள குப்பைகளையும், கழிவு பொருட்களையும் வீடு தேடி வரும் பேரூராட்சி தூய்மை பணியாளர்களிடமும், பேரூராட்சி வாகனங்களிலும்,அதற்காக இளையான்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களிலும் இன்று காலை 7:00 மணியிலிருந்து மாலை 5:00 மணி வரை வழங்கி புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட ஒத்துழைக்க வேண்டும் என்றனர்.