வண்ணாரப்பேட்டை,சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, சஞ்சீவிராயன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் இளஞ்சி, 66. இவர் தன் மகன் மோகன் என்பவரோடு வசித்து வருகிறார்.
நேற்று, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், நன்கு பழக்கமான அதே பகுதியைச் சேர்ந்த நகை ஆசாரி ஆறுமுகம் வீட்டிற்கு வந்துள்ளார்.
இளஞ்சியிடம் பேச்சு கொடுத்த ஆறுமுகம், திடீரென வீட்டில் இருந்த குழம்பை எடுத்து மூதாட்டியின் முகத்தில் தேய்த்து கழுத்தை நெரித்தார். இதில் மூதாட்டி மயக்கமடைந்த நிலையில், அவரது ஐந்தரை சவரன் செயினை பறித்து சென்றார்.
மயக்கம் தெளிந்த மூதாட்டி, இது குறித்து தன் மகன் மோகனிடம் மொபைல் போனில் தகவல் தெரிவித்துள்ளார்.
விசாரித்த தண்டையார்பேட்டை போலீசார், ராயபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம், 40, என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.