திருச்சி:திருச்சி அருகே நடந்த சமத்துவ பொங்கல் விழாவில், மாவட்ட கலெக்டர்மாட்டு வண்டி ஓட்டி வந்தது அனைவரையும் கவர்ந்தது.
திருச்சி மாவட்டம், இனாம்குளத்துாரில் நேற்று காலை, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
இதில் பங்கேற்க, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து வந்த கலெக்டர் பிரதீப் குமார், சமத்துவபுரம் வந்ததும், காரில் இருந்து இறங்கி, அங்கிருந்த மாட்டு வண்டியை ஓட்டிக் கொண்டு பொங்கல் வைக்கும் இடத்துக்கு வந்தார்.
இதை, பொங்கல் விழாவில் பங்கேற்ற அரசு அதிகாரிகள், சமத்துவபுரம் மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
கலெக்டரின் இந்த அணுகுமுறை விழாவுக்கு வந்த அனைவரையும் கவர்ந்தது.
நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன், ஸ்ரீரங்கம் ஆர்.டி.ஓ., செல்வராஜ், உதவி இயக்குனர் கங்காதாரணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.