பெரம்பலுார்:அரியலுார் அருகே பட்டதாரி இளம்பெண், கைக்குழந்தையுடன், தன் காதலனை போலீசார் உதவியுடன் கரம் பிடித்தார்.
அரியலுார் மாவட்டம், குட்டக்கரை காலனி தெருவைச் சேர்ந்தவர் சந்துரு, 24; டிப்ளமோ படித்த இவர், கடலுார், காட்டுமன்னார்குடி வில்வகுளம் பகுதி பட்டதாரியான நர்மதா, 21, என்பவருடன், ஓராண்டாக நெருங்கி பழகி வந்தார்.
இந்நிலையில், அந்த பெண்ணுக்கு ஒரு மாதத்துக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, சந்துருவை திருமணம் செய்ய கேட்டபோது, அவர் மறுத்துள்ளார்.
நர்மதா அளித்த புகாரில், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சுமதி, இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேசி, அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க அறிவுறுத்தினார்.
அதன்படி, நர்மதாவை ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து சந்துரு திருமணம் செய்தார். இருவரும் திருமண கோலத்தில் கைக்குழந்தையுடன் ஜெயங்கொண்டம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர். அவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.