திருநெல்வேலி:-திருநெல்வேலியில் தேவேந்திர குல வேளாளர்பண்பாட்டு நடுவத்தின் சார்பில் இந்திர விழா கொண்டாடப்பட்டது.
திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் தேவேந்திர குல வேளாளர் பண்பாட்டு நடுவத்தின் சார்பில், குணசேகர் ஏற்பாட்டில் இந்திர விழா நடந்தது.
பா.ஜ., மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை வகித்தார். அகில இந்திய சன்னியாசிகள் சங்க மாநில இணை செயலர் சுவாமி ராகவானந்தா, வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரமம் சுவாமி சைதன்யானந்தஜீமகராஜ் முன்னிலை வகித்தனர்.
'தேவேந்திரர் யார்' எனும் நுாலை வெளியிட்டு நயினார் நாகேந்திரன் பேசுகையில், ''1939 வரை தாழ்த்தப்பட்ட சமுதாயம் என்று ஒன்று இல்லை. அதன் பிறகே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்விழா தேவேந்திரகுல வேளாளர்சமூகத்தின் பாரம்பரியத்தை, அடையாளத்தை எடுத்துக்காட்டுவதாகும்,'' என்றார்.
'ஒரே நாடு' இதழ் ஆசிரியர் நம்பி நாராயணன், தேவேந்திர சேனா தலைவர் சேகர், பா.ஜ., கூட்டுறவு பிரிவு மாநில தலைவர்மாணிக்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.